அட்சய திருதியை முன்னிட்டு இரட்டை கருட சேவை
அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜ கோபால சுவாமி ஆலயத்தில் அட்சய திருதியை முன்னிட்டு இரட்டை கருட சேவை நடந்தது.;
Update: 2024-05-11 00:58 GMT
அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜ கோபால சுவாமி ஆலயத்தில் அட்சய திருதியை முன்னிட்டு இரட்டை கருட சேவை நடந்தது.
அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜ கோபால சுவாமி ஆலயத்தில் அட்சய திருதியை முன்னிட்டு இரட்டை கருட சேவை நடந்தது. பெரிய திருவடி ஸ்ரீ கருடாழ்வார் திருமாலின் இரண்டு திருவடிகளையும், தம் தோள்களில் தாங்கி, ஊர்வலமாக பக்தர்களுக்கு அருள் பாலித்திட வரும் காட்சியே கருட சேவை. நேற்று முன் தினம் மாலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, ஸ்ரீ நரசிம்ம சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள, தேரோடும் விதிகளில் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் சேவித்தனர். இதற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.