சிறுமி கர்ப்பம் - கணவன் உட்பட 3 பேர் மீது வழக்கு

விருதுநகரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2024-01-12 02:54 GMT
காவல் நிலையம் 

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சார்ந்தவர் ஜெபஜீவன் இவர் தந்தை பவுல்ராஜ் தாய் ரெஜினா மேரி. ஜெப ஜீவன் கடந்த ஆண்டு உடுமலைப்பேட்டை பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அதே பகுதியைச் சார்ந்த சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த சிறுமி கடந்த ஆண்டு மே மாதம் நான்காம் தேதி தனது வீட்டில் இருக்க பிடிக்காமல் விருதுநகர் வந்து ஜெப ஜீவன் என்பவரை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Advertisement

இதை அடுத்து கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி ஜெப ஜீவன் மற்றும் அந்த சிறுமி திருமணம் செய்துள்ளனர். இருவரும் ஜெப ஜீவன் வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் சிறுமியை குழந்தை திருமணம் செய்த ஜெப ஜீவன் மற்றும் அவருடைய தந்தை மற்றும் தாய் மீது விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அழகு சார்பாக புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News