பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்
பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொண்னையம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் ஆடு வளர்ப்பதாகும்.
இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாகவே இரவு நேரங்களில் ஆடு திருடர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர்.இதுவரை 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இப்பகுதி திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை ஆடுகளை பறிகொடுத்தவர்கள் காரையூர் காவல்துறையிடம் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆடு திருடர்கள் தொடர்ந்து ஆடுகளை திருடு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த தீபாவளி அன்று பொன்னழகு என்பவரின் வீட்டில் ஆடு திருடர்கள் ஆடுகளை திருடிச் அதிலிருந்து ஆடுகளை பாதுகாப்பதற்காக ஆடுகள் கட்டப்படும் இடத்திற்கு அருகிலேயே பொன்னழகு உறங்கியுள்ளார்.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் வந்த ஆடு திருடர்கள் பொன்னழகின் ஆட்டை திருடியுள்ளனர். அப்பொழுது ஆடு சத்தம் போடுவதை கண்ட ஆட்டின் உரிமையாளர் பொன்னழகு என்பவர் திருடர்களை பார்த்து அலறிக்கொண்டு திருடர்களை நோக்கி சென்றுள்ளார்.
ஆட்டின் உரிமையாளர் துரத்துவதை கண்ட திருடர்கள் ஆடுகள் வெட்ட பயன்படுத்தப்படும் பட்டாகத்தியை கொண்டு பொன்னழகை நோக்கி எரிந்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக அவரது உடலில் படாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.தொடர்ந்து அவரது கணவரும் துரத்துவதை கண்டு ஆட்டினை திருடர்கள் விட்டுச் சென்றுள்ளார்.
அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆண்டி என்பவரது ஆட்டு பட்டியில் இரவு நேரத்தில் வந்த ஆடு திருடர்கள் அவரது குரவளையில் அரிவாள் வைத்து 20க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிச்சென்றுள்ளனர். எனவே ஆடு வளர்ப்பவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் இதனால் இரவு நேரத்தில் தூக்கம் கெடுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே ஆடு திருடர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டியும் மேலும் இரவு நேரத்தில் காவலர்களை ரோந்து பணிக்கு அனுப்ப வேண்டும் எனவும் காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டுமெனவும் ஊராட்சி மன்றத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.