ஆட்டு சந்தையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனை

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் ஆட்டு சந்தையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Update: 2024-05-26 10:23 GMT
திருவேங்கடம் ஆட்டு சந்தையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் சந்தைப்பேட்டையில் உள்ள ஆட்டுச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்பட்டு வெள்ளாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவேங்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான திருவிழாக்கள் வருவதால் வெள்ளாடுகளை வாங்குவதில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் திருவேங்கடம் சந்தை சிறிய அளவில் உள்ள சந்தை என்பதாலும் கனிசமான ஆடுகள் வருவதாலும் ஏராளமானோர் வந்து ஆடுகளை வாங்கிச் சென்று வருகின்றனர். தரத்தை பொறுத்து சிறிய ரக ஆடுகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், பெரிய ரக ஆடுகள் 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மொத்தம் சந்தையானது ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.
Tags:    

Similar News