ரூ.32 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயம் - போலீசார் விசாரணை.

கோவையில் ரூ31.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை ஊழியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.;

Update: 2024-01-23 02:15 GMT

வழக்குப்பதிவு 

கோவை சாமி ஐயர் புது வீதியை சேர்ந்த தங்க நகை பட்டறை உரிமையாளர் கார்த்திகேயன்.தங்ககட்டிகள் பெற்று அதனை ஆபரணமாக செய்து பல்வேறு கடைகளுக்கு கொடுத்து வருகிறார். இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை பணி முடித்த பின்னர் லிங்கேஸ்வரன் பட்டறையை மூடிவிட்டு அதன் சாவியை உரிமையாளரிடம் கொடுக்காமல் பட்டறையில் இருந்து 31,80,000 மதிப்பிலான 530 கிராம் தன்வசம் எடுத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரியகடை வீதி போலீசார் பட்டறையில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவான லிங்கேஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News