நங்கவல்லியில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

சேலம் மாவட்டம் நங்கவல்லியில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

Update: 2024-03-03 12:41 GMT

தங்க மோதிரம் அநிவிப்பு

சேலம் மாவட்டம்.மேட்டூர்ரில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நங்கவள்ளி அரசு ஆரம்ப நிலைய சுகாதார மையத்தில் பிறந்த மூன்று ஆண் குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சரும் ,சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம். செல்வகணபதி தங்க மோதிரம் அணிவித்து,

மூன்று குழந்தைகளுக்கும் தலா ரூ 10,000 வங்கியில் டெப்பாசிட் காசோயை வழங்கினார் . நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நடைபெற்ற புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை டி.எம்.செல்வகணபதி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வனவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக, பாமக, பி.ஜே.பி, யை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 700 பேர் அக்கட்சியில் இருந்து விலகி டி .எம். செல்வகணபதி முன்னிலையில் திமுக,வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சம்பத்குமார் ,ஒன்றிய செயலாளர் அர்த்தநாரீஸ்வரர், பேரூர் செயலாளர்,வெங்கடாசலம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News