தாராபுரத்தில் வியாபாரியிடம் ரூ.91 ஆயிரம் , 15 கிராம் தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
தாராபுரம் அலங்கியம் சாலையில் வாய்க்கால் மேடு பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த பாலகுமார் என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி 91,000 ரொக்க பணமும் 15 பவுன் கிராம் தங்கம் பறிமுதல் செய்து தாராபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
Update: 2024-03-27 11:20 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் வாய்க்கால் மேடு பகுதியில் நிலைய கண்காணிப்பு குழு அலுவலர் வினோத் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப் போது நேற்று 5 மணியளவில் அலங்கியத்திலிருந்து தாராபுரம் நோக்கி வந்த ஒரு மொபட்டை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். மொபட்டை ஓட்டி வந்தவர் கொழிஞ்சிவாடியைச் சேர்ந்த பாலகுமார் (வயது51) என்பதும், அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.91 ஆயிரம், 15 கிராம் தங்கம் ஆகியவற்றை கொண்டு வந்ததும் தெரியவந் தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவை தாராபுரம் கருவூலத்தில் ஒப்படைக் கப்பட்டது.