மரத்தில் அரசு பேருந்து மோதல்; 5 பேர் காயம்
தவுத்தாய்குளம் கிராமம் அருகே ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த அரசு பேருந்து அருகிலிருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.;
Update: 2023-12-05 11:59 GMT
தவுத்தாய்குளம் கிராமம் அருகே ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த அரசு பேருந்து அருகிலிருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூரில் இருந்து அரியலூர் நோக்கி இன்று அரசு பேருந்தை அசோக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது தவுத்தாய்குளம் கிராமம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த அரசு பேருந்து இடதுபுறம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உள்பட 5 பேர் காயமடைந்தனர். மேலும் இதுகுறித்து அரியலூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.