அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பேருந்து நடத்துனர் உயிரிழப்பு !!
முனியப்பன் கோவில் அருகே டூ வீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பேருந்து நடத்துனர் உயிரிழந்தார்.
முனியப்பன் கோவில் அருகே டூ வீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பேருந்து நடத்துனர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, காருடையாம்பாளையம், நாவலடி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 50. இவர் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கரூர் பிரான்ச் 2-வில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் மே 29ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் கரூரிலிருந்து கோவை செல்லும் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் முனியப்பன் கோவில் அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், செந்தில்குமார் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது.இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த செந்தில்குமார் மனைவி வனிதா வயது 37 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த செந்தில்குமார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.