பூந்தமல்லியில் வழக்கம் போல் இயங்கிய அரசு பேருந்துகள்.

Update: 2024-01-09 09:11 GMT

தொமுச அறிவிப்பு 

போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தமிழக அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் அரசு பேருந்துகள் இயங்காது என சி ஐ டி யு மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை தெரிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல் இன்று மாலை பல்வேறு பணிமனைகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பூந்தமல்லி பணிமனையில் இருந்து இயங்கக்கூடிய அரசு பேருந்துகள் வழக்கம் போல் இன்று இயங்கியது. குறிப்பாக பூந்தமல்லியில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இருப்பினும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது அதற்கேற்றார் போல் பேருந்துகள் இடைவெளி விட்டு சீராக இயக்கப்பட்டது. பூந்தமல்லி பஸ் நிலையத்தில் பேருந்துகள் இயக்க சிறிது காலதாமதம் ஏற்பட்டதால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் இப்போதே ஸ்ட்ரைக் ஆரம்பித்து விட்டார்களா என பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் இருப்பினும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கியது பூந்தமல்லி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச நிர்வாகிகள் நாளை வழக்கம் போல் அரசு பேருந்துகள் இயங்கும் என அறிவிப்ப பலகையில் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News