அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை அருகே அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை சௌடேஸ்வரி நகர் பகுதியில் வசிப்பவர் பிரசன்னா வயது 56 இவர் குமாரபாளையம் அருகே உள்ள சமய சங்கிலி கதவனை_ கதவனை மின் உற்பத்தி நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அலுவலக பணிகாரணமாக சென்னை சென்றுவிட்ட நிலையில் பிரசன்னா வின் மனைவி கீதா மற்றும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். திடீரென மாலை நேரத்தில் பிரசன்னாவின் மகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் கீதா வீட்டை பூட்டிவிட்டு தனது மகளை அழைத்துக் கொண்டு, ஈரோடு மருத்துவமனைக்கு சென்று விட்டு, பின்னர் இரவு தனது தாயார் வீட்டிலேயே தங்கி விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை மற்றும் 70,000 ரூபாய் ரொக்கம் திருட்டுப் போய் இருந்தது. இதனை அடுத்து தனது கணவருக்கு தகவல் அளித்துவிட்டு, வெப்படை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பின்னர் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தால் வெப்படை பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது..