அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமை வகித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 06:20 GMT
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமை வகித்தார். திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பொதுக்குழு உறுப்பினர் தென்னலுார் பழனியப்பன் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான் றிதழ் வழங்கினார். தனியார் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர்கள் பாலாஜி சுந்தர்ராஜ், சுஜாதா ஆகியோர் கடந்த ஆண்டு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினர். பள்ளி மேலாண்மை குழுவினர் உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார். ஆசிரியர் ரெசினா ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமையாசிரியர் தேவகி நன்றி கூறினார்.