இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு ஆணை
கன்னியாகுமரி மாவட்ட கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
Update: 2024-03-01 04:10 GMT
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மற்றும் அனந்தனார் கால்வாய் கடைமடை பகுதி நெற்பயிர்களை காப்பாற்றும் விதமாகவும் மற்றும் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிகொடை விழாவிற்கு பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் வழியாக தண்ணீர் வழங்குவதற்கும் சேர்த்து, 01.03.2024 முதல் 15.03.2024 வரை தினசரி 400 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு கூடுதல் கால நீட்டிப்பும், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயில் உள்ள பயிர்களை காப்பாற்ற 15.03.2024-க்கு மேல் தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் மேலும் 5 நாட்களுக்கு தினசரி 200 கன அடி வீதமும் (5 x 200 x 0.0864 = 86.40 மில்லியன் கன அடி), ஏப்ரல், மே மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் குடி தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய அனைத்து கால்வாய்களுக்கும் தண்ணீர் வழங்குவதன் மூலம் மேலும் 5 நாட்களுக்கு தினசரி 800 கன அடி வீதமும் (5 x 800 X 0.0864 = 345.60 மில்லியன் கன அடி), நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து. தேவைக்கேற்ப கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.