ஆரோவில்லில் இசை பூங்கா திறப்பு கவர்னர்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் உதய தினத்தையொட்டி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,

Update: 2024-03-01 17:14 GMT

தமிழிசை சவுந்தரராஜன் 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் உதய தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஸ்வரம் இசை பூங்கா திறப்பு விழா நேற்று நடை பெற்றது. தமிழக கவர்னரும், ஆரோவில் நிர்வாகக்குழு தலைவருமான ஆர்.என்.ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதனை தொடர்ந்து ஸ்வரம் என்ற இசை பூங்காவை கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, அங்கு இருந்த இசை கருவிகளை இசைத்து மகிழ்ந்தனர். விழாவில் ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி மற் றும் நிர்வாகக்குழுவினர், ஆரோவில்வாசிகள் கலந்துகொண்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ஒரு நாட்டில் இளைஞர்கள் ஊக்கப்படுத்தப்படும் போதுதான் அந்த நாடு மேன்மையடையும். நமது பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ஒரு இளைய நாடு என்று கூறுகிறார். இளைஞர்களால் எந்த ஒரு செயல் முன்னெடுத்து செல்லப்படும்போதும் அது நிச்சயமாக நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் உலக அரங்கில் எடுத்துச்செல் லும். நம் நாடு வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறது. உலக மக்களை ஆரோவில்லோடு ஆன்மிகம் இணைக்கிறது என்றார்.
Tags:    

Similar News