நடுவழியில் பிரேக் டவுன் - பயணிகள் அவதி
அரசு பேருந்து ஒன்று நடுவழியில் நின்றதால் பயணிகள் பேருந்தை தள்ளும் நிலை ஏற்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-19 14:18 GMT
அரசு பேருந்து
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு சிதம்பரத்திலிருந்து வந்த அரசு பேருந்து (TN68N1038) மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் புறப்பட்டது. பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்ற பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே திடீரென நின்றது. உடனடியாக பேருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்றுப் பேருந்தின் மூலம் சென்றனர். தொடர்ந்து சாலையில் நின்ற பேருந்தை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தள்ளி சென்று சாலையின் ஓரமாக நிறுத்தினர். இதனால் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.