பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து - 20 பயணிகள் காயம்
கீழக்கரை நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாடை இழந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.;
Update: 2024-05-09 09:18 GMT
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற ஒன்றாம் நம்பர் அரசு பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் ஒன்று சைடு கொடுக்காமல் சென்றதால் அதனை முந்த முற்பட்ட அரசு பேருந்து சருக்கலில் நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து கவிழ்ந்த பேருந்தில் இடுபாடுகளுக்குள் சிக்கி இருந்த பொதுமக்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திராமல் வட்டாட்சியர் வாகனத்தில் ஏற்றி கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.