டோல்கேட் கட்டணம் செலுத்த வழியின்றி அரசு பேருந்து நிறுத்தம்

டோல்கேட் கட்டணம் செலுத்த வழியின்றி அரசு பேருந்து நிறுத்தபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-10-28 02:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இங்குச் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் பாஸ்ட்டேக் மூலம் கட்டணங்களை செலுத்தி  டோல்கேட்டை  கடந்து செல்கின்றனர் இந்த நிலையில் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்து சாத்தூர் டோல்கேட் வந்துள்ளது. பேருந்தில் இருந்த ஃபாஸ்ட் டேக்கில் பணம் இல்லாததால் அரசு பேருந்துக்கு டோல்கேட் ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர் இதனை அடுத்து அரசு பேருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பேருந்து ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டது இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்தை விட்டு இறங்கி கூச்சலிட்டுள்ளனர். தங்களை மாற்று பேருந்தில் அனுப்பி வைக்குமாறு பேருந்து ஓட்டுநர்  மற்றும் நடத்துனரை முற்றுகையிட்டுள்ளனர். இதனை அடுத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மண்டல போக்குவரத்து பணிமனை அலுவலர்களை தொடர்பு கொண்டு பாஸ்ட் டேக் ரீசார்ஜ் செய்த பின்னர் பயணிகளை ஏற்றுக் கொண்டு பேருந்து மதுரை புறப்பட்டு சென்றது. அரசு பேருந்து டோல்கேட்டில் அனுமதி மறுக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News