மக்கள் குறை தீர்ப்பு முகாமில் செல்போனில் மூழ்கிய அரசு அதிகாரிகள்
செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், மனுக்களை வாங்க வேண்டிய அதிகாரிகள் செல்போனில் முழுகியதால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் வேதனைக்கு உள்ளாகினர்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, மக்கள் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படுகிறது அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இது தவிர, மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிடுவர். மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்பகுதி-சுற்று வட்டார ஏழை மக்கள் இந்த முகாமைப் பயன்கடுத்தத் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.
அதன் படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டறங்கில் மக்கள் குறை தீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோதே சில அரசு அதிகாரிகள் தங்களது செல்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.. அதிலும் குறிப்பாக ஒருவர் அமேசான் என்கிற செயிலியில் பிளாக் கலர் ஷூ எவ்வளவு..?? எந்த சைஸ் வாங்கலாம் என மும்பரமாக தேடிக் கொண்டிருந்தார்.. அதேபோல் ஒரு சில ஊழியர்கள் செல்போன்களில் உரையாடிக் கொண்டிருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் நேரடியாக முகாமில் கலந்து கொண்டு மனு கொடுக்கும் போதே இந்த நிலைமை என்றால் மக்கள் தனித்தனியாக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தால் என்ன நிலைமையோ என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்க உள்ளனர்.. குறைத்தீர் முகாமில் செல்போன் பயன்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்.?