செய்தியாளரின் சிகிச்சைக்கான முழு தொகையையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்-எல் முருகன்

செய்தியாளரின் சிகிச்சைக்கான முழு தொகையையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-25 15:48 GMT

சிகிச்சை பெறும் செய்தியாளரை நேரில் சந்தித்த அமைச்சர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிகிச்சை பெற்று வரும் நேசபிரபுவை பார்த்துவிட்டு அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பேசிய அமைச்சர் எல் முருகன் பல்லடம் பகுதியில் செய்தியாளர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் மீது காவல்துறை அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காவல் துறையிடம் உதவி கேட்டும் உதவி மறுக்கப்பட்டு இருக்கிறது எனவும் உரிய நேரத்தில் காவல் துறை உதவி செய்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியும் என்றார்.

காவல்துறையின் மெத்தனப் போக்கு தான் காரணம் எனவும் அந்த காவல்துறையின் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் நேரத்தில் ஊடகத்தில் உள்ள நபருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது எனவும் இன்றைக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது என்பது இந்த சம்பவம் காட்டியுள்ளது.

எனவும் தெரிவித்தார்.பல்லடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை இதேபோன்று சரமாரியாக வெட்டிய சம்பவம் நடைபெற்றது என்றவர் தோட்டத்தில் ஏன் மது அருந்துகிறார்கள் என கேட்டதற்காக நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதே பகுதியில் தான் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.

ஊடகத்தினர் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் நியாயமான செய்தியை தைரியத்தோடு வழங்கும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாகவும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது எனவும் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா? என்பது இன்றைக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் நிகழ்ச்சி எங்கேயாவது ஒளிபரப்பபடுகிறதா அல்லது பிஜேபி கொடியேற்றுகிறார்களா? இதை போன்ற வேலையை தான் காவல்துறையினர் பார்க்கின்றனர் எனவும் இந்த சமூக விரோதிகள்,கூலிப்படையினர் போல தாக்குதல் நடத்துபவர்களை கண்காணிப்பதில்லை என குற்றம் குற்றம் சாட்டினார்.

காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டும் எனவும் காவல் துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.தமிழக காவல்துறை மிக கடுமையாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் எவ்வித பாரபட்சமற்ற விசாரணை நடத்திட வேண்டும் என்றவர் சிறப்பு புலனாய்வு குழு கையில் கொடுத்தால் தான் சரியாக இருக்கும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தாக்கபட்ட செய்தியாளருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்த நிலையில் 15 யூனிட் வரையிலும் ரத்தம் கொடுக்கப்பட்டு மருத்துவமனை சார்பில் முழுமையான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் சிகிச்சைக்கான முழு தொகையை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்

Tags:    

Similar News