தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;

Update: 2024-03-10 07:07 GMT
தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்,18-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில்,கற்பக விநாயகா கல்வி குழும நிறுவனங்களில் இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ட்ரூடெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் துணைத் தலைவர் ஜான்அலெக்ஸ் தங்கதுரை கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன், கல்லூரி டீன் சுப்பராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News