உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் விழா

பஞ்சபட்டியில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2023-12-13 11:05 GMT

பஞ்சபட்டியில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பஞ்சபட்டியில், மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்கமும், மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக நல அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் இணைந்து உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பார்வையற்றோர் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மைச் செயலாளருமான ஜெயசுதா மற்றும் மாவட்ட சுயதொழில் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சமூக நீதி இயக்க மாற்றுத்திறனாளிகள் மாநில பொதுச் செயலாளரும், மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்ட தலைவருமான கந்தசாமி, மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக நல அறக்கட்டளையின் தையல் பயிற்றுனர்கள் தமிழரசி மற்றும் செல்வி, உள்ளிட்ட மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாகவி சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் மரம் நடும் விழா நலத்திட்டத்தை துவக்கி வைத்தனர். சங்கத்தின் தகவல் பலகையை மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்க மாநில தலைவர் சரவணன் திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பல்வேறு சமூக சேவைகள் செய்த மகாகவி களப்பணியாளர்கள் மற்றும் சமூக சேவைகளுக்கு விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், மகாகவி சமூக நல அறக்கட்டளை சார்பில் மகாகவி சிறுசேமிப்பு திட்டத்தையும் துவக்கி வைத்தனர்.

Tags:    

Similar News