மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
Update: 2024-04-29 00:27 GMT
கண்சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து தேசூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர். குமார் தலைமையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 350 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 59 நபர்களை கண் சிகிச்சைக்காக சென்னை அகர்வால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.