அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா !
கோயம்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கோயம்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, கோயம்பள்ளி ஊராட்சி பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் ஸ்ரீ தொட்டிய கருப்பண்ணசாமி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாகவேள்வி தொடக்க பூஜையும், தொடர்ந்து நாடி சந்தானம், ஸ்பர்சாஹிதி, த்ரவியாஹிதி,மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, மகா தீபாதாரணையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மங்கல இசை முழங்க, வேத மந்திரங்கள் முழங்க, தேவாரம், திருவாசகம் எடுத்து இயம்பி, கலசம் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவர் பரிவார தெய்வத்திருமேனிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தாந்தோணி ஒன்றிய திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், கோயம்பள்ளி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.