காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் 33 புகார் மனுக்கள் பெறப்பட்டது.
Update: 2024-02-08 07:40 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிவக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு டி.எஸ்.பி., குகன் தாலைமை தாங்கி, மனுக்களைப் பெற்றார். ஏற்கனவே பெறப்பட்ட 10 மனுக்களில் 8 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.
நிலுவையில் உள்ள 2 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புதியதாக நேற்று 33 புகார் மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.