திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10ஆம் தேதி குறைதீர் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 10.06.2024ம் தேதி அன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-08 10:35 GMT
திருச்சி மாநகராட்சி
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 10.06.2024 முதல் பிரதி திங்கட்கிழமை வழக்கம்போல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மேயர் அன்பழகன், தலைமையில் பொது மக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
அதுசமயம் பொதுமக்கள் மாண்புமிகு மேயர் அவர்களிடம் தங்களுடைய மனுக்களை நேரடியாக வழங்கலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.