சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-12-29 16:55 GMT

குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, காரைக்குடி சட்டமன்ற‌ உறுப்பினர் மாங்குடி உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்ததாவது,  கண்மாய்க்கு நீர் வழங்குதல், இலவச விவசாய மின் இணைப்பு, சாலையை சீரமைத்தல், காண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஆற்றிலிருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறத்தல், தடுப்பணைகள் அமைத்தல், கால்வாய் விரிவாக்கம், சாலையில் நடைபெறும்.

சந்தைகளை அப்புறப்படுத்துதல், விளை நிலங்களில் ஆக்கிரமிப்பு, கரும்பு ஆலையில் உக்கத்தொகை வழங்க வேண்டும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கோசாலைகளில் அடைத்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்

Tags:    

Similar News