திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது;

Update: 2023-12-02 06:41 GMT

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கர்நாடகாவில் இருந்து உரிய காவிரி நீரை பெற்று மேட்டூர் அணையில் நீரை சேமித்தால்தான் சம்பா ,தாளடி சாகுபடி நிறைவில் தண்ணீர் தேவைக்கு திறக்க முடியும். திருக்கண்ணமங்கை- அம்மையப்பனிடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். வெட்டாற்றிணை தூர்வார வேண்டும் .விவசாயிகள் விளைபொருட்கள் கொண்டு செல்ல வயல் வழிச்சாலைகளை அமைத்து தர வேண்டும். மும்முனை மின்சார இணைப்புகளை கூடுதலாக வழங்கிட வேண்டும். சாலை விரிவாகத்தில் அகற்றப்பட்ட வடிகால்களை மேம்படுத்திட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.
Tags:    

Similar News