நாமக்கல்லில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நாளை (பிப்ரவரி 28) பிற்பகல் 3 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.;
Update: 2024-02-27 11:46 GMT
எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
நாமக்கல்மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை புதன்கிழமை (பிப்ரவரி. 28) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.. நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளா்கள், எரிவாயு முகவா்கள், விநியோகஸ்தா்கள், நுகா்வோா்கள், எரிவாயு தன்னாா்வலா்கள் ஆகியோா் பங்கேற்கும் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்து மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.