திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் குறை தீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது;
குறைதீர் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத்தேர்வு கூட்டம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் அப்போது துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர் குரைதீர்வு கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பல்வேறு தோல் தொழிற்சாலை நிறுவனங்கள்ஆலை யிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பாலாற்றில் கலந்து விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விலைநிலங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் குன்றி வருகின்றது என்று வலியுறுத்தினார் அப்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கூறுகையில், வாணியம்பாடி பாலாற்றில் கழிவுநீர் கலக்கும் நிறுவனங்கள் கண்டறிந்து அதன் உரிமையை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்திரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது
தற்போது கத்திரிக்காய் செடிகளுக்கு சுருள் இலை போன்று ஒரு வகையான மர்ம நோய் தாக்குகிறது இதனால் மொட்டுக்கல் மலரும்போது உதிர்ந்து விடுவதால் போதிய சாகுபடி செய்ய முடியாமல் உள்ளது என விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைத்தனர் உடனே ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வாங்கும் பொழுது ஏக்கருக்கு ஐயந்து ஆயிரம்முதல் பத்தாயிரம் வரை உரம் கொடுக்கின்றனர்.
இயற்க்கை உரம் குறைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் சாலை வசதி குறித்தும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு அகற்ற கோரியும் விவசாய கடன்கள் குறித்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர் ஆட்சியர் துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு மனு மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வராசு சார் ஆட்சியர் பானு உள்ளிட்ட அரசு துறையை சேர்ந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது