குமரி சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்று பார்வையிட்ட குழு

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தையொட்டி தமிழக அரசின் சுற்றுலாத்துறை சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்று காணும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2024-01-20 15:13 GMT
சைக்கிள் சுற்றுலா கன்னியாகுமரியில் துவங்கியது

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தையொட்டி சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்று காணும் நிகழ்ச்சியை தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து உள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 43 பேர் நேற்று கன்னியாகுமரி வந்தனர்.   

முதல் நாளான நேற்று  இவர்களது சைக்கிள் பயணத்தை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.        ராமானுஜம் மவுலானா தலைமையில் சைக்கிளில் புறப்பட்ட குழுவினர், வட்டக்கோட்டை, திருப்பதி சாரம் திருவாழி மார்பன் கோவில், தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவில் ஆகிய இடங்களை பார்வையிட்டு  60 கிலோ மீட்டர் தூரம்  சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர்.      

இன்று 2-வது நாளாக கன்னியாகுமரியில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட இவர்கள் பத்மநாபபுரம் அரண்மனை, திருவட்டார் ஆதிகேசபெருமாள் கோவில், மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி ஆகிய இடங்களுக்கு 70 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் பயணம் செய்தனர்.       நாளை காலை 7 மணிக்கு இவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு முட்டம் கலங்கரை விளக்கத்தை 62 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து  பார்த்துவிட்டு கன்னியாகுமரிக்கு திரும்புகிறார்கள். இவர்கள் இந்த சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்று பார்ப்பதன் மூலம் யோக நிலையை அடைய முடிகிறது என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News