அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பள்ளிபாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதுதல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் அமைந்துள்ள நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ,அரசு பொது தேர்வு எழுத உள்ள 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் என்.சண்முக சுந்தரி வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் சி.என்.ராஜா கூறும் பொழுது, ஒவ்வொரு மாணவரும் தேர்வை சந்திக்கும் போதே, தங்களது எதிர்கால வாழ்வை தீர்மானித்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டுமென பேசினார் .பள்ளியின் செயலாளர் நந்தி மோகன் ஒலி வடிவில் வடிவிலான வாழ்த்து செய்தியை அனுப்பி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென ஊக்கப்படுத்தினார்.
மேலும் அப்பள்ளியிலே பயின்று வெற்றி பெற்று ,தற்போது பொறுப்பான உயர் பதவியில் பணி செய்து வரும், முன்னாள் மாணவர்களான பொறியாளர் கவிராஜ், வழக்கறிஞர் செல்வி, காவியா, பொறியாளர் சந்துரு குமார், பொறியாளர் ரவீந்திரன் மற்றும் நுண்ணுயிரியல் விஞ்ஞானி சீனிவாஸ் பிரபு ஆகியோர் தாங்கள் வாழ்க்கையிலும்,
படிப்பிலும் வெற்றி பெற்றதற்கு, முக்கிய காரணமாக பள்ளி, தங்களது குடும்ப சூழல் ஆகியவை இருந்ததாக குறிப்பிட்டு பேசினர். பள்ளியின் துணை முதல்வர் ராஜேஷ் நன்றி உரை கூற நிகழ்வு நிறைவு பெற்றது.