குமரி மின்னணு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பொது இயந்திரம் மற்றும் வி வி பேடுகள் மாவட்ட ஆட்சியர் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Update: 2024-03-22 07:56 GMT

குமரி மின்னணு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பொது இயந்திரம் மற்றும் வி வி பேடுகள் ஆகியன முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நிறைவு பெற்று குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 3406 கட்டுப்பாட்டு கருவிகள், 4937 வாக்குப்பதிவு கருவிகள், 2254 விவி பேட் கருவிகள் ஆகியன இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இவைகள் அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி வழியில் குலுக்கல் செய்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பிரிக்கப்பட்டது.

பின்னர் இவை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கிட்டங்கியிலிருந்து பிரிக்கப்பட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தாலுகா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதிக்கு பூதப்பாண்டில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகம், நாகர்கோவில் தொகுதிக்கு நாகர்கோயில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம், குளச்சல் தொகுதிக்கு தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம், பத்மநாபபுரம் தொகுதிக்கு பத்மநாபபுரம் ஆர்டிஓ அலுவலகம் , விளவங்கோடு தொகுதிக்கு விளவங்கோடு தாலுகா அலுவலகம், கிள்ளியூர் தொகுதிக்கு கிள்ளியூர் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு சென்று வைக்கப்பட்டது. தாலுகா அலுவலகங்களில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி எழுதிய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நடத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News