திருப்பூரில் உள்ள 50 அடி உயர வீர பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் குண்டம் திருவிழா
திருப்பூரில் உள்ள 50 அடி உயர வீர பத்ரகாளியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
Update: 2024-01-12 11:19 GMT
திருப்பூரில் உள்ள 50 அடி உயர வீர பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் குண்டம் திருவிழா ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். திருப்பூர் மேட்டுப்பாளையம் ஆறு கோம்பை வீதியில்மாவட்டத்தில் 50 அடி உயரத்தில், 30 அடி உயர சிம்ம வாகனத்தில், அம்மன் வீற்றிருக்கிறார்.இந்த 50 அடி உயரம் கொண்ட வீர பத்ரகாளியம்மன் திருக்கோவில்,ஸ்ரீ பெரியசாமி குரு ஞானபீடம் கோவிலில் 37-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1-ம் தேதி கணபதி ஹோமம்,கொடியேற்றத்துடன் துவங்கியது , வீர பத்திரகாளிஅம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அம்மன் திருவீதி உலா, சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடைபெற்றது. சந்தன காப்பு, புஷ்ப அலங்காரம், தனலட்சுமி, மீனாட்சி, கருமாரியம்மன் என, தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். முரசன் சாமிக்கு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டது, வீரபத்திரகாளியம்மனுக்கும், சிம்ம வாகனத்துக்கும் கனி மற்றும் பூ மாலை அணிவிக்கப்பட்டு குண்டம் திருவிழா துவங்கியது.இந்த குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி கொண்டத்து வீர பத்ரகாளியம்மன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.