பெயின்டர் கொலை வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்
பெயிண்டர் கொலை வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (21) இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஃபைசல், தில்லை நம்பி, சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதி சேர்ந்த சகாய சஜின் ஆகிய மூன்று வரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இதில் பைசல், தில்லை நம்பி இருவரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். சகாய சனோஜ்மீது ஏற்கனவே ராஜாக்கமங்கலம், இரணியல் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி வழக்கு இருந்து வந்தது. இதையடுத்து சகாய சனோஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ் பி சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதை அடுத்து கலெக்டர் ஸ்ரீதர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சகாய சனோஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் பால முருகன் தலைமையிலான போலீசார் சகாய சனோஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.