சுசீந்திரம் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜை

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-02 06:02 GMT

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம்  தாணுமாலயன் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி நேற்று தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதனால் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலஸ்தானம் அருகே தென்திசை நோக்கி அமைந்துள்ள குருபகவானான தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு 10 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாரதனை நடந்தது. பக்தர்கள் நறுமண பூக்கள், கொண்டைக் கடலைமாலை, மஞ்சள் நிறத்துண்டு, கற்கண்டு ஆகியவற்றை சுவாமிக்கு படைத்து நெய் விளக்கு, நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி தங்கள் ராசி பெயரில் அர்ச்சனை செய்தனர்.       இதற்காக உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணுமாலயன் சுவாமி கோவிலுக்கு வந்து இருந்தனர்.
Tags:    

Similar News