கும்மிடிப்பூண்டியில் குட்கா விற்றவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே குட்கா விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 கிலோ புகையிலைபொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-19 03:29 GMT
பைல் படம் 
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள தெருவில் ஒரு வீட்டில், குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியை சேர்ந்த நுார் முகமது, 37, என்பவரிடம், 10 கிலோ எடை, குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், நுார் முகமதை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News