குட்கா விற்பனை - 5 பேர் கைது

ராஜபாளையத்தில் நடந்த அதிரடி சோதனையில் குட்கா விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு, 25 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-12-24 01:00 GMT
கைது செய்யப்பட்டவர்கள் 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் ராஜபாளையம் பகுதியில் பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ராஜபாளையம் அருகே உள்ள கலங்காபெரி பகுதியில் ஆட்டோவில் சென்று நான்கு பேர் ஒவ்வொரு கடைகளுக்கும் புகையிலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்த போது சிவகிரி பகுதியைச் சேர்ந்த தங்கம் சேத்துரைச் சேர்ந்த முருகன் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பௌர்ணமிசாமி ஆகிய நான்கு பேர் குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதே போன்று ராஜபாளையம் இஎஸ்ஐ காலனி அருகே உள்ள மாரிமுத்து என்பவர் டீ கடையில் குட்கா விற்ப்பது தெரிய வந்த நிலையில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட மாரிமுத்து டீக்கடையில் இருந்து15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தென்காசி மாவட்டத்தில் இருந்துதான் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை வருவது தெரிய வந்தது.

Tags:    

Similar News