புகையிலை விற்பனை கடைக்கு சீல்

திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அபராதம் விதித்து கடையை சீல் வைத்தனர்.

Update: 2024-02-08 10:20 GMT

கடைக்கு சீல் 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே விஷ்ணு காபி பார் என்ற கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை அடுத்து தாடிக்கொம்பு காவல்துறையினர் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து அக்கடையின் உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து கடையை சீல் வைத்தனர்.
Tags:    

Similar News