ஆம்னியில் குட்கா கடத்தல் - 3 பேர் கைது

வெங்கல்பட்டியில் ஆம்னி வேனில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-09 06:22 GMT

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வெங்க்கல்பட்டி ரவுண்டானா பகுதியில், ஆம்னி வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லைகரசிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜூன் 7ஆம் தேதி காலை 11 மணி அளவில், வெங்க்கல்பட்டி ரவுண்டானா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஒரு ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது, அந்த வேனுக்குள் 115 பாக்கெட்டுகள் ஹான்ஸ், கூல் லிப் 27 பாக்கெட்டுகள், விமல் பாக்கு, 91 பாக்கெட்டுகள் என மொத்தம் ரூபாய் 52,450 மதிப்புள்ள 51 கிலோ, 200 கிராம் எடை கொண்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் ,வேடசந்தூர், டி.கூடலூரை சேர்ந்த ரமேஷ் வயது 50 என்பவரையும், கரூர் மாவட்டம், குருணை குளத்துப்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்த அபுதாகிர் வயது 40 என்பவரையும், கரூர் வடக்கு முருகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சாவ்ல்ராம் வயது 34 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News