அரக்கோணத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

அரக்கோணத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-05-17 12:57 GMT

குட்கா பறிமுதல் 

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கிருபில்ஸ்பேட்டை, எஸ்.ஆர்.கேட் மற்றும் அரக்கோணம் - காஞ்சீபுரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடேசபுரம் அகன் நகர் பகுதியில் கடையின் அருகே இருந்த நபர் ஒருவர் போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார்.

உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்த நாராயணன் (58) என்பதும், வெங்கடேசபுரம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 337 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News