கரூரில்,H. ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில்,H. ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-18 04:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில்,H. ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் அமெரிக்காவுக்கு சென்ற இந்திய அரசின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக கூறி பாஜக வழிகாட்டுதல் குழு தலைவர் எச் ராஜா ஒரு கருத்தை பதிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மாலை எச் ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை அவதூறாக பேசிய பாஜக வழிகாட்டுதல் குழு தலைவர் எச் ராஜாவை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ஸ்டீபன் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எச் ராஜாவை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News