விராலிமலையில் உரிமம் பெற்ற 68 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததால் விராலிமலை தொகுதியில் 68 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.
Update: 2024-03-18 07:04 GMT
மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், விராலிமலை, அன்னவாசல், இலுப்பூரில் உரிமம் பெற்ற 68 துப்பாக்கிகள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கான நாள்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதன்படி, விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து உரிமம் பெற்ற 68 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.