தேவர் கவசம் மீண்டும் ஒப்படைப்பு
தேவர் தங்க கவசத்தை வங்கியில் மீண்டும் ஒப்படைத்தார் திண்டுக்கல் சீனிவாசன்.;
By : King 24x7 Website
Update: 2023-11-01 09:01 GMT
தேவர் கவசம் மீண்டும் ஒப்படைப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழா,61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு கடந்த அக் 25ம் தேதி தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை அண்ணாநகர் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அதை, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக அந்த தங்க கவசம் தேவருக்கு அணிவிக்கப்பட்டு குருபூஜை விழா நடந்து முடிந்தது.இதனை தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழா முடிந்ததையொட்டி பசும்பொனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தங்க கவசம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்துட்டு தேவர் தங்க கவசத்தை வங்கியில் மீண்டும் ஒப்படைத்தனர்.இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயளாலர் எம்.ஏ.முனியசாமி, மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.