நாடாளுமன்ற தேர்தலையொட்டி துப்பாக்கிகள் ஒப்படைப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாநகரில் 420 பேர், புறநகரில் 700 பேர் என மொத்தம் 1,120 பேர் துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-23 06:57 GMT
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்திருப்பவர்கள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர். சேலம் மாநகரில் 420 பேர், புறநகரில் 700 பேர் என மொத்தம் 1,120 பேர் துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.