திருக்கோவிலூர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-01-12 06:18 GMT
அனுமன் ஜெயந்தி விழா
திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை வெண்ணைக் காப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, நாமசங்கீர்த்தனம், மகா தீபாராதனை நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியர் சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புத்துார் பாலகோபால சுவாமி பஜனை குழுவினரின் பஜனை நடந்தது.