அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவில், அனுமன் சன்நிதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Update: 2024-01-11 02:32 GMT

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவில், அனுமன் சன்நிதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன.  

அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் உள்ள அனுமன் சன்னதியில் கடந்த மூன்று நாட்களாக அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இந்நிலையில் அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அனுமனுக்கு வடை மற்றும் வெற்றிலை மாலை சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து காலை 9 மணி அளவில் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பு தீபாராதனையும் நடைபெற உள்ளது மாலை 6 மணி அளவில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனுக்கு வெத்தலை மாலை வெண்ணை ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்து வருகின்றனர்

Tags:    

Similar News