மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க மோடி வந்தால் மகிழ்ச்சி-எம்.பி
எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கு வந்த மோடி தற்போது அக்கட்டிடத்தை திறந்து வைக்க வருகை தந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் என எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.;
எம்பி
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் மதுரை மேற்கு மண்டலம் 5க்குட்பட்ட 99 வது வார்டு திருமலையூர் பாம்பன் நகர் செல்லும் சாலையில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.
பூமி பூஜையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் உதவி செயற்பொறியாளர் மாம் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி.மாணிக்கம் தாகூர் கூறுகையில்: பாஜக, டெல்லி பத்திரிக்கைகளும் எதிர்பார்த்தது போன்று இல்லாமல்,
இந்தியா கூட்டணி இப்போது வெற்றிகாரமான கூட்டணியாக தொடர்கிறது. சமாஜ்வாதியுடன் இடங்கள் பகிறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி காட்சியுடன் இணைய உள்ளது. இந்தியா கூட்டணி தொடர்ந்து பலமான கூட்டணியாக மாறி வருகிறது. 300 இடங்களை கைப்பற்றும் என்பது எந்த மாற்றமும் இல்லை, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வெடித்திருக்கிறது. மோடியுடன் ஆட்சி இளைஞருக்கு, பெண்களுக்கு, விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி. மதத்தை இழுப்பது பஜாக்கவினருக்கு பழக்கம், அவர்களுக்கு RSS பயிற்சி கொடுத்து மதத்தை இழுப்பதும், போராடுப்பவர்களை ஒடுக்குவது பாஜகாவின் பணி. இல்லாத ஒன்றை பெரிதாக்குவார்கள். இது கண்டிக்க தக்கது. உண்மையான விவசாயிகள் போராட்டம். கடந்த முறை 700 மேற்பட்ட விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த முறை முதல் விவசாயி ஒரு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருக்கிறார். இந்த கொடுமை இதுவரை நடந்ததே இல்லை, ஊடகங்களும் இதை வெளிப்படுத்த தயங்குகிறது.
அண்ணாமலை உண்மை தவிர வேறு ஏதும் சொல்ல மாட்டார் அண்ணாமலை சொல்வதெல்லாம் முழு பொய், முழு பூசணிக்காய் மறைப்பது போன்று தான் அண்ணாமலை பேசுகிறார் அவர் பேசுவதை பொறுப்பெடுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஆளுநருக்கும், முதல்வருக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசியவர் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது, அவருடைய பயிற்சி ஆர்எஸ்எஸ்-ன்னுடைய பயிற்சி. எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கு வந்த மோடி தற்போது கட்டிடத்தை திறந்து வைக்க வருகை தந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். வேற ஏதாவது அவர் துவங்கி வைத்த திட்டங்களுக்கு முடித்து வைக்க வந்திருந்தால் வரவேற்கலாம். 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அடிக்கல் நாட்டம் புறப்பட்டு இருக்கிறார்கள். தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள், தமிழர்கள் ஏமாறுபவர்கள் அல்ல.