வெறுப்பு பிரச்சாரம், பொய் பரப்புபவர்களுக்கு தேர்தலில் தண்டனை 

பொய் பிரச்சாரம் செய்து அரசியலில் வெற்றி பெறலாம் என்று நினைப்பவர்களுக்கு தேர்த்லில் தண்டனை கிடைக்கும் என்று அமைச்சர் நிருபர்களிடம் கூறினார்.

Update: 2024-03-07 02:50 GMT


பொய் பிரச்சாரம் செய்து அரசியலில் வெற்றி பெறலாம் என்று நினைப்பவர்களுக்கு தேர்த்லில் தண்டனை கிடைக்கும் என்று அமைச்சர் நிருபர்களிடம் கூறினார்.


தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம்  கூறியதாவது:- 

நாட்டில் பட்டினி, பசி, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.  ஆனால் இந்த தேசம் ஒன்றில் முதல் பரிசு பெற்றுள்ளது. அது எதுவென்றால் மறுப்பு பேச்சிலும், பொய் பிரச்சாரத்திலும் முதல் இடத்தில் உள்ளது. இந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் பாரதிய ஜனதாவினர் என்பதை ஆய்வுகள் தெளிவாக தெரிவிக்கிறது.  

எனவே வெறுப்பு பிரச்சாரத்தையும் பொய்யை பரப்புவதையும் தொழிலாக வைத்துக் கொண்டு அரசியலில் வெற்றி பெறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். தேர்தலில் அவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கப் போகிறது என்று பாருங்கள். கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மாவட்டம் இந்த மாவட்டத்தில் அவருக்கு இவருக்கென்று இல்லாமல் மக்கள் மீது பற்று, திராவிட கொள்கை மீதான பற்று என்று அதற்குள் தான் மக்கள் உள்ளனர். இனி அவர் ( விஜயதரணி) தேர்தலில் நின்று டெபாசிட் வாங்கி விடட்டும் பார்க்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

Tags:    

Similar News