சம ஊதியம் வேண்டும்; இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சம ஊதியம் வழங்க வேண்டும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்யக்கூடாது என வலியுறுத்தி ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-02-27 06:32 GMT

சம ஊதியம் வழங்க வேண்டும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்யக்கூடாது என வலியுறுத்தி ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி எண், 311ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் இது நாள் வரை சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றாமல் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைய குழு அமைத்தும் அதற்கான இறுதி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில் தற்போது நான்கு மாதங்கள் கடந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற கோரியும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட கோரியும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News