காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்

திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடம் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது.

Update: 2024-03-20 09:28 GMT

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் 

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. இதில் 4 வார்டுக்கு ஒரு சுகாதார பணியாளர் ஆய்வாளர் என 12 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஆர்.எம்.காலனி, கோவிந்தாபுரம், ராமநாதபுரம், அசோக் நகர்,அண்ணா நினைவு நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 2,3,4,9 ஆகிய வார்டுகளுக்கு உள்ள சுகாதார ஆய்வாளர் கடந்த 4 மாதத்திற்கு முன் திருச்சியில் சுகாதார அலுவலராக பதவி உயர்வு பெற்று சென்றார்.

அதன் பிறகு இந்த பகுதியில் சுகாதார ஆய்வாளர் நியமனம் செய்யப்படவில்லை.அதன் பிறகு இந்த பகுதியில் சுகாதார ஆய்வாளர் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மாநகராட்சி சம்பந்தமான பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News